Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் படத்திலேயே 100 கோடி வசூல், 75 இலட்சம் பென்ஸ் கார் வாங்கிய இயக்குனர்.. எல்லாம் விஜய் சேதுபதி ராசி!

விஜய் சேதுபதியை வைத்து சமீபத்தில் படம் இயக்கிய இளம் இயக்குநர் 100 கோடி வசூல் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த படத்தில் நடித்த ஒரே ஒரு தெரிந்த முகம் நம்ம விஜய் சேதுபதிதான்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் விஜய்சேதுபதி தெலுங்கில் உப்பெண்ணா என்ற படத்தில் வில்லனாக ஹீரோயினுக்கு தந்தை வேடத்தில் நடித்திருந்தார். ராயணம் என்ற கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களை கொண்டாட வைத்தது.

அதுமட்டுமில்லாமல் உப்பெண்ணா படத்தில் இடம் பெற்ற தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி அந்த படத்தின் அறிமுக நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கு முதல் படமே 100 கோடி வசூல் படமாக அமைந்தது. அந்த படத்தில் நடித்த 17 வயதான கீர்த்தி ஷெட்டி என்ற நடிகை தற்போது தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பெண்ணா படத்தை புஜ்ஜி பாபு என்பவர் முதன் முதலாக இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே தெலுங்கு முன்னணி இயக்குனர் சுகுமார் என்பவரின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பெண்ணா படம் 100 கோடி வசூல் செய்ததைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் அந்த படத்தின் இயக்குனரான புஜ்ஜி பாபுவுக்கு 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக கொடுத்துள்ளனர்.

BuchiBabuSana-cinemapettai

BuchiBabuSana-cinemapettai

Continue Reading
To Top