fbpx
Connect with us

Cinemapettai

இவர்கள் மரணதண்டனைக்கு தகுதியானவர்கள்… விஜயபாஸ்கருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு பாடமாய் அமையட்டும்…

இவர்கள் மரணதண்டனைக்கு தகுதியானவர்கள்… விஜயபாஸ்கருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு பாடமாய் அமையட்டும்…

“சட்டபடி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும், ஒற்றுமையையும் நிறைவேற்றுவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உளச்சான்றின் படியும் எனது கடமையை நிறைவேற்றுவேன் என்றும் அரசியல் அமைப்பிற்கும்,சட்டத்திற்கும் இணங்க அச்சமும், சார்பும் இன்றி விருப்பு வெறுப்புகளை களைந்து பலதரப்பட்ட மக்களுக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்”

இது தமிழக அமைச்சராக பொறுப்பேற்பவர்கள் எடுத்துக்கொள்ளும், உறுதி மொழியும், ரகசிய காப்புப் பிரமாணமும் ஆகும்.

ஆனால் இவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று நாற்காலியில் அமர்ந்த பிறகு நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி பல்லாயிரக்கணக்கான கோடிகளை பத்து தலைமுறையினருக்கும் உக்காந்து சாப்பிடும் அளவிற்கு சேர்த்து வைக்கின்றனர். எவன் குடி கெட்டா என்ன?.,எவன் வாழ்ந்தால் என்ன, எவன் செத்தால் என்ன..எதைபற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. அரசும், சட்டமும் இவர்களுக்கு சாதகமாகவே செயல்படும்.

இவ்வாறு இயற்கை வழங்களை கொள்ளையடிப்பதில் எந்த வகையிலும் யாருக்கும்  சளைக்காதவர் அல்ல  அமைச்சர் விஜயபாஸ்கர். முதன் முதலாக ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவர் தமிழகத்திலேயே இளம் வயதில் அமைச்சரானவர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இவர் தனது பதவியை பயன்படுத்தி செய்த காரியங்கள் அவரது வயதுக்கு மீறிய செயல். மிகப்பெரிய அளவிலான ஊழல். மன்னார்குடி மட்டத்தில் நல்ல பெயர் இருந்ததால் எவ்வளவு வேண்டுமானாலும் நாட்டை கொள்ளையடிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

ஆற்று மணல், தாது மணல் மற்றும் இதர கனிமங்களை அரசு அனுமதித்த வரையறைக்கு மேல் வாரிச் சுரண்டுவது வெகு காலமாகவே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் நீண்ட நாட்களாக இந்த கனிமக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும்கட்சி, எதிர்கட்சி என பாரபட்சம் இன்றி இந்த கொள்ளையில் ஈடுபடுவதால் இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எழுப்பப்படுவதில்லை. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இவர்களுடைய கொள்ளையை எழுதியும், ஒளிபரப்பியும் ஓய்ந்து விட்டன.

அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் எடுக்கப்படுகிறதா என்பதை, சீரான கால இடைவெளியில் அந்தந்த பகுதிகளில் உள்ள குவாரிகளுக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான அதிகாரிகளுக்கு லஞ்சம் வீடு தேடியே வந்து விடுவதால் இதுகுறித்து அவர்கள் கண்டுகொள்வதில்லை.

சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு, மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் குவாரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 130 ஏக்கர் பரப்பளவில் மணல் சேமிப்பு கிடங்கு நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலின் மதிப்பு 50 கோடிக்கும் மேல் தாண்டுமாம்.

சட்ட விரோதமாக மணல் கிடங்குகளை அமைக்கக் கூடாது. அங்கே மணலை சேமித்து வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் அமைச்சருக்கு சொந்தமான மணல் கிடங்கு என்பதால் அதிகாரிகளிடம் இருந்து எந்தத் தொல்லையும் இல்லாமல் நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை அமைச்சர் மட்டும் இன்றி, அதிகாரிகளும் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை விதகளின் படி, 100 கான அடி மணல் ஒப்பந்ததாரர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு டிரக் லோடு என்பது 400 கன அடி கொண்டது. மணல் எற்றுக்கூலி, வாட் வரி எல்லாம் சேர்த்து ஒரு டிரக் லோடு 2080 ரூபாய்க்கு தான் விற்கப்பட வேண்டும். ஆனால் அமைச்சரின் கிடங்கிலிருந்து அள்ளிச் செல்லும் மணல் ஒரு லோடுக்கு ரூ.5000 – 8000  வரை வசூலிக்க படுகிறதாம்.

இந்த மணல் கொள்ளை வியாபாரத்தால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக ரூ.15000 கோடிவரை நஷ்டம் ஏற்படுகிறது. இயற்கை வளத்தை சுரண்டி மணல் கொள்ளையில் மட்டுமே இவ்வளவு கோடி சம்பாதித்தால் இது தவிர மற்ற ஏனைய வியாபார்களில் ஒரு அமைச்சர் எவ்வளவு சம்பாரிப்பார்?, அதற்கு துணை போகும் அதிகாரிகள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்?

விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்து விபரங்களில் சில…

இதுமட்டுமல்லாமல் ,

  • துறை பனி நியமனங்கள், புரோமோஷன், டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலகோடி ரூபாய்
  • சுகாதாரத்துறையில் முறைகேடான வகையில் பலகோடி ரூபாய் மதிப்பில் பொருகள் வாங்கியதாக போலி ஆவணங்கள்
  • மணல் மற்றும் கல் குவாரிகள் மூலம் பல கோடி ரூபாய் வருமானம்
  • கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு 300 கோடி ரூபாய் பணம், 300 கிலோ தங்கம்
  • ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா

என்று நீள்கிறது இவருடைய ஊழல் பட்டியல். இவர் மீது  நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு பதவியில் அமர வைத்த மக்களை இவர் தெரிந்தே முட்டாள் ஆக்கியதர்கான சிறிய சான்றுகள் தான் இவை. இதுபோன்ற நம்பிக்கை துரோகம் செய்யும் அமைச்சர்களுக்கு மரணதண்டனை வழங்கினால் கூட தகும்.

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி இருக்கும் விஜயபாஸ்கரின்  குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில்  அவருக்கு உச்சபச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது வாக்களித்த கடைகோடி தொண்டனின் மனக்குமுறலாக இருக்கிறது. இவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top