Hollywood | ஹாலிவுட்
அன்பானவன், அடங்காதவன், அசராதவன் – டெட் பூல் 2 திரை விமர்சனம் !
ஹாலிவுட்டில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் ஹீரோ’ படம் ‘டெட் பூல்’. ரியான் ரெனால்ட்ஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் 2-ஆம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த டெட் பூல் கதாபாத்திரம் மார்வெல் காமிக்ஸ் உடையது. எக்ஸ்மென் பட வரிசையில் வெளிவரும் 11 வது படம். சென்ற பார்ட் பார்த்திருக்க வேண்டும், எக்ஸ்மென் சீரிஸ் பற்றிய தெளிவான அறிவு வேணும் என்பதெல்லாம் கிடையாது. யார் சென்று பார்த்தாலும் புரியக்கூடிய படம் தான் இது.

Dead Pool
கதைக்கு செல்லும் முன் டெட் பூல் பற்றி சொல்லியே ஆக வேண்டியது நம் கடமை. இவன் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று யாராலும், ஏன் அவனால் கூட சொல்ல முடியாது. சக மனிதர்கள், முய்டன்ட், சூப்பர் ஹீரோ (படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், படம் பார்க்கும் நாம் உட்பட) என அனைவரையும் பங்கமாக கலாய்ப்பவன். இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக இருக்கும், மேலும் சண்டைக்காட்சிகளும் அதிரடி சரவெடி தான். அதனால் தான் இப்படங்கள் 18 + வகையறா.
கதை

deadpool2
இது ஒரு பேமிலி என்டேர்டைனர் என்று ஆரம்பிக்கிறார் கதையை. நூற்றுக்கணக்கான கெட்டவர்களை அசாத்தியமாக கொன்ற இவரிடம் இருந்து ஒருவன் மட்டும் தப்பித்து விடுகிறான். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று தன் கேர்ள் பிரிண்டிடம் வருகிறார். இவரை தாக்க புது ஆட்களுடன் வருகிறான் அவன். அந்த சண்டையில் இவரின் ஆள் வனேசா மரணம் அடைகிறார். தற்கொலைக்கு முயலும் நம் ஹீரோவை, எக்ஸ்மென் மேன்ஷன் அழைத்து செல்கின்றனர். உன் காதலி இல்லாவிடினும் நாங்கள் தான் உன் பேமிலி என்கின்றனர்.
முய்டன்ட் சீர்திருத்த இடத்தில் கட்டுக்கடங்காமல் நெருப்பை தன் முஷ்டியில் இருந்து வெளியேற்றும் சிறுவன் ரஸ்ஸல். அங்கு சென்று அதகளம் செய்த இவரை மற்றும் சிறுவனை ஐஸ் – பாக்ஸ் என்ற சிறையில் அடைகின்றனர்.

CABLE
வருங்காலத்தில் இருந்து பழி தீர்க்க வருகிறான் “கேபிள்”. அவர் டார்கெட் நம் ஹீரோ அல்ல, அந்த சிறுவன் தான் என்றும், வருங்காலத்தில் அவன் கொடிய கொலைகாரன் ஆக மாறி விடுகின்றான். தன் குடும்பத்தை அவன் வருங்காலத்தில் கொலை செய்யபோவதை தடுக்கவே கேபிள் வந்துள்ளான்.

Deadpool 2
கேபிளிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற எக்ஸ் – போர்ஸ் டீம் உருவாக்குகிறார். முதலில் கேபிளுடன் சண்டை போடா, பின் இணைந்து சிறுவனை காப்பாற்ற என்று அதகளம் செய்கிறார் டெட் பூல். ஜுகார்னட் வருவது என்று சர்ப்ரைஸ் வைத்துள்ளனர். காமெடி , ஆக்ஷன், செண்டிமெண்ட் என்று நகர்கிறது. சிறுவனை காப்பாற்ற தன் உயிரை இழக்கிறான் டெட் பூல். மீண்டும் உயிர்தெழுந்தானா, அது எப்படி சாத்தியம் என்று சில பல ட்விஸ்டுகள்.
சினிமாபேட்டை அலசல்
காமிக்ஸ் ரசிகர்கள் என்று இல்லாமல், யார் வேண்டுமானாலும் சென்று பார்க்கக்கூடிய படம். இரண்டு மணிநேரம் நம்மை நன்றாக சிரித்து மகிழ வைக்கிறான் இந்த டெட் பூல். டோபிந்தர் என்ற இந்திய வம்சாவளி கதாபாத்திரம் அனைவர் கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. ஆக மொத்தத்தில் நண்பர்களுடன் சென்றால் இந்த சம்மரைக்கு நல்ல டைம் பாஸ்.

dead pool 2
சினிமாபேட்டை ரேட்டிங் 3.75 / 5
போஸ்ட் கிரெடிட்
எப்பொழுதுமே அடுத்த பார்ட்டின் டீஸர் காட்டுவது தான் இவர்கள் ஸ்டைல். இம்முறை இரண்டு கிரேடிட்ஸ் உள்ளது. எனவே அவசரப்பட்டு யாரும் வெளியே வந்துவிடாதீர்கள்.
