இறந்தவர் மீண்டும் உயிரோடு வந்தார்.. அதிர்ச்சியில் பதறி ஓடிய ஊழியர்கள்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து மீண்டும் உயிரோடு வந்துள்ளார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதனை பற்றிய பரபரப்புதான் அந்த ஊர் முழுக்க பரவி கொண்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் என்ற 72 வயது முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதை வைத்து காவலர்கள் மருத்துவமனைக்கு வந்து அவர் இறந்துள்ளதாக தகவல் சேகரித்து விட்டு பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மார்ச்சுவரி கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு செய்துள்ளனர். அப்போது அவரது உடலில் அசைவு ஏற்பட்டதை அடுத்து பதறி போய் அவரை மீண்டும் மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சை செய்துள்ளனர்.

வியாழன் இரவே இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் வெள்ளிக்கிழமை காலைதான் உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும் சிகிச்சை இல்லாமல் காலையில் இறந்துள்ளார். இதுகுறித்து மீண்டும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், மருத்துவரின் கவனக்குறைவால் தான் அந்த முதியவர் இறந்துள்ளார் என்றும் இரவு முழுவதும் சிகிச்சை கிடைக்கவில்லை அதனால் இறந்துள்ளார் என அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் மருத்துவரின் மீது தவறு என்று காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது அவர்களை விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment