எம்ஜிஆர் நம்பியாருக்கு செய்யப்பட்ட De Aging.. கோட் படத்தின் இளைய தளபதியை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை

Vijay of the movie goat teased by blue sattai: யார் படம் வெளியானாலும் பாரபட்சமே இல்லாமல் பங்கமாய் கலாய்ப்பதை ப்ளூ சட்டை மாறனின் முக்கிய வேலை. அதனால் எந்த படம் வந்தாலும் இவருடைய விமர்சனத்துக்காகவே பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களையும் நடிப்பையும் கடுமையாக விமர்சனம் செய்வார். அப்படிப்பட்டவர் கோட் படத்தையும் விட்டு வைக்கவில்லை.

கோட் படத்தில் பல கோடி செலவில் செய்யப்பட்ட De Aging டெக்னாலஜியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் கிட்டத்தட்ட 5000 ஸ்கிரீனில் நேற்று ரிலீசாயிருக்கிறது. இப்படம் இப்பொழுது வரை பெருசாக நெகட்டிவ் என்று சொல்லும் அளவிற்கு எந்த விமர்சனங்களையும் பெறவில்லை.

ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக திருப்தியாக தான் படம் வெற்றி பெற்று வருகிறது. அதனால் தான் நேற்று வெளியான முதல் நாள் வசூலாக ஒட்டுமொத்தமாக 120 கோடி லாபத்தை பார்த்திருக்கிறது என்று தகவல் வெளியாயிருக்கிறது. இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால் எப்படியும் போட்ட பட்ஜெட்டை இந்த நான்கு நாட்களுக்குள் எடுத்து விடுவார்கள் என்று கருத்துக்கணிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

blue sattai goat
blue sattai goat

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் கோட் படத்தின் இளைய தளபதியை பங்கமாய் கலாய்த்து பதிவு போட்டு இருக்கிறார். அதாவது எந்த டெக்னாலஜியும் பயன்படுத்தாமல் அசத்தலாக De Aging செய்வதில் வல்லவர்கள் நம் சினிமாவின் முன்னோடிகள் தான் என்று கூறியிருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த நீதிக்கு தலைவணங்கு படத்தில் நடிக்கும் பொழுது எம்ஜிஆர்க்கு 59 வயது நம்பியாருக்கு 57 வயது. ஆனால் அப்பொழுது எந்த டெக்னாலஜியும் பயன்படுத்தி அவர்கள் வயசை கம்மியாக காட்டவில்லை. இருந்தாலும் இவர்கள் இருவரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் போல் நடித்தார்கள். அதிலும் கார் ரேஸ்தான் இவர்களின் இன்ட்ரோ சீன்.

blue sattai goat (1)
blue sattai goat (1)

அப்பொழுது இவர்களுக்கு தேவைப்பட்டது De Aging டெக்னாலஜி அல்ல வெறும் ஆளுக்கு ஒரு விக் தான். இதை மட்டுமே வைத்து காலேஜ் ஸ்டுடென்ட் போல் நடித்து வெற்றி பெற்றார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் சுருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படத்திலும் தனுஷுக்கு 29 வயசு, சிவகார்த்திகேயனுக்கு 27 வயசு.

ஆனால் இரண்டு பேருமே ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ். எந்தவித டீஜெனிக்கும் செய்யப்படாமல் சேவிங் பிளேட் மட்டுமே பயன்படுத்தி பள்ளி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இத கூட பார்ப்பதற்கு கொஞ்சம் எதார்த்தமாகவும் நன்றாகவும் இருந்தது.

ஆனால் இப்பொழுது விஜய்யை இளைய தளபதியாக காட்ட வேண்டும் என்பதற்காக பல கோடி செலவு செய்து அதிக அளவு மெனக்கெடு செய்து எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போய்விட்டது என்று ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News