ModiOPS_cinemapettai

மே 10ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். விரைவில் தேர்தல் வரப்போகும் குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் தான் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழகமும், கேரளாவும் திடீரென அதில் சேர்க்கப்பட்டு உள்ளன. பிஜேபி தனது ஆபரேஷனை வெளிப்படையாக இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. அதிமுக என்ற கட்சியும், தமிழகத்தில் அதன் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியும் மன்னார்குடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடக்கூடாது என்பதை ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த மோடி அப்போதே தீர்மானித்து விட்டார்.

தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மூலமாக அதிமுக-வை இரண்டாக உடைத்தது, சசிகலா பெங்களூரு சிறைக்குச் சென்றது, அதன் பின்னர் வந்த தினகரனுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து தனிமைப்படுத்தியது என மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது பாஜக.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஆரம்பத்தில் இருந்தே முதலமைச்சர் அரியணையில் அமர மக்களவை துணை சபாநாயகர் பல்வேறு உள்ளடி வேலைகளை டெல்லியில் இருந்தபடியே செய்து வந்தார். ஆனால் சசி தரப்பு அதனை புரிந்து கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தது. தம்பிதுரையை டெல்லியில் தூது செல்வதற்காக மட்டும் பயன்படுத்தியது.

அதிகம் படித்தவை:  சிம்பு, வெங்கட் பிரபு படத்தின் டைட்டில் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். அப்போது அவரிடம் தம்பிதுரை நேரடியாக மோதலில் ஈடுபட்டார். ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதால் தம்பிதுரை மீது சசி தரப்பு கடும் கோபத்தில் இருந்தது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தம்பிதுரை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சென்ற வாரம் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து பிரதமர் மோடியிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய அசைன்மென்ட் வெங்கைய நாயுடுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிபிதுரையுடனான சந்திப்பின் போது, நாயுடு சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்றால்,

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் அதிமுக ஒரே கட்சியாக இனைந்து செயல்படுவதையே பாஜக விரும்புகிறது. இதை ஏற்காத பட்சத்தில் எவ்வாறான விளைவுகளை அதிமுக சந்திக்க நேரிடும் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும், விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டு குறித்து பேசிய அவர், விஜயபாஸ்கர் சந்திக்க இருக்கும் பின் விளைவுகள் குறித்து பேசிய போது, தம்பிதுரை அதிர்ந்து போனாராம். உடனடியாக சென்னைக்கு ஃபிளைட்டை பிடித்த தம்பிதுரை நடக்கப்போகும் விபரீதங்கள் குறித்து எடப்பாடியிடம் விளக்கி சொல்லி சூதானமாக முடிவெடுக்குமாறு கூறியுள்ளார். அதன் தொடர்ச்சியே தமிழகத்தில் நடைபெறும் அதிரடி மாற்றங்கள்.

அதிகம் படித்தவை:  தலையே சுத்தும் அளவிற்கு இருக்கிறது முன்னணி நடிகைகளின் புதிய சம்பள விவரம்.! லிஸ்ட் இதோ

அடுத்தது என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுகேஷ் சந்திரா என்பவரிடம் டி.டி.வி. தினகரன் பணம் கொடுத்ததை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்தனர். அதையடுத்து தினகரன் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஃபெரா வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் பெயரைக் கெடுத்து அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சிறையில் அடைத்து, பல வருடங்களுக்கு வழக்கை இழுத்தடித்து தினகரனை முடக்குவதே பாஜக.,வின் தற்போதைய திட்டம் என்று கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தை தமிழக அரசியலில் இருந்தே முழுமையாக வாஷ் அவுட் செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை வைத்து ஆட்சியையும், பன்னீர் செல்வத்தை வைத்து கட்சியையும் நடத்துவதே பாஜக.வின் மாஸ்டர் பிளான்.