இந்தியா நியூ ஸிலாந்து முதல் டி 20 போட்டி நடக்கவுள்ள நிலையில் டெல்லி கிரிக்கெட் வாரியம் சிறிய விழாவிற்கு ஏற்பாடு செய்தது. அப்பொழுது கோட்லா மைதானத்தில் உள்ள கேட்-2வை, விரேந்தர் சேவாக் கேட், என்று பெயர் மாற்றியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா அணியின் வீரர்கள் சிலர், கோச் ரவி சாஸ்திரி மற்றும்
முன்னாள் டெல்லி வீரர்கள் அதுல் வாசன், நிகில் சோப்ரா, ரஜத் பாட்டியா போன்றவர்கள் பங்கேற்றனர்.


அப்பொழுது பேசிய சேவாக் ‘மைதானத்தில் உள்ள ஒரு கேட்டிற்கு என் பெயர் வைக்கப் பட்டுள்ளது, வரும் நாட்களில் இதே போன்ற கவுரவம் மேலும் பல வீரர்களுக்கு கிடைக்கும். வரும் காலங்களில் கேலரி, ட்ரெஸ்ஸிங் ரூம் போன்றவையும் கிரிக்கெட் வீரர்களின் பெயர் கொண்டு மாற்றப்படும் என்று எதிர் பார்க்கிறேன். டிடிசிஏ செய்த நல்ல விஷயம்.
என்னுடைய ஆசை என்ன வென்றால் இது போன்ற விழாக்கள் நடை பெரும் பொழுது டெல்லி மற்றும் இந்தியா அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களையும் அழைக்க வேண்டும்,என்னுடன் சம்பந்தப் பட்டவர்களையும் அழைக்க வேண்டும்.
இது மகிழ்ச்சியான தருணம் என்னுடன் விளையாடியவர்கள், எனக்கு கிரிக்கெட் கற்று கொடுத்தவர்கள், என்னுடைய முதல் ரஞ்சி போட்டியில் ஆடியவர்கள் இங்கு உள்ளார்கள். சிலரால் இங்கு வர முடிய வில்லை.’

Delhi Feroz Shah Kotla Stadium’s Gate 2 is renamed as VIRENDER SEHWAG GATE

லெஜெண்ட்ஸ் ஆர் பார் இவர்:
அந்த கேட்டில் இந்த பஞ்ச் லைன் உடன் ஷேவாகின் போட்டோ இடம் பெற்றுள்ளது.  இன்னொரு பகுதியில் மற்றோரு பேனல் அமைத்து அதில் அவர் சர்வதேச அளவில் எடுத்த ரன் விவரங்கள், அவர் கடந்த 14 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியல் இட்டுள்ளனர்.

“இங்கு சிறு வயதில் இருந்து சேவாக் விளையாடினர், அவர் பெயரில் ஒரு கேட் உள்ளது என்பதை பார்த்தால், இளம் வீரர்களுக்கு அது சிறந்த ஊக்குவிப்பாக அமையும். நானும் யூ-16, 19, 23, ரஞ்சி பின் இந்தியாவிற்கு விளையாடினால் எனக்கும் இது போன்ற மரியாதையை கிடைக்கும் என்று நம்புவார்கள்.” என்று கூறி சேவாக் தன் பேட்டியை முடித்தார்.

ஆசிஷ் நெஹ்ரா கடைசி போட்டி:

ஒரு நிருபர் ஆஷிஷ் அவர்களின் கடைசி போட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்ட பொழுது, அவர் தான் அதிரடி ஸ்டைலில் “அதை பற்றி நாளை பேசுவோம்,இன்று என்னுடைய நாள், என்னைப்பற்றி மட்டும் பேசுவோம்.” என்றார்.

கருண் நாயர் -டி டி சி ஏ செய்த தவறு :
கர்நாடகாவை சேர்ந்த கருண் நாயர், ஐபில்இல் டெல்லி டேர் டெவில்சின் கேப்டனும் இவரே.

இவர் கடந்த டிசம்பர் மாதம் தான் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் ட்ரிபிள் செஞ்சுரி அடித்தார். ஷேவாகிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்தது இவர் மட்டுமே அதை மறந்து விட்டதா டிடிசிஏ என்று தெரியவில்லை. விரைவில் இந்த தவறை கரெக்ட் செய்தால் நன்று.
ONLY INDIAN TO SCORE A TRIPLE CENTURY IN TEST CRICKET.

DDCA’s mistake regarding Triple Century in Test Matches.

ஒரு வார்த்தையை மாற்றினால் போதும் வேலை முடிந்து விடும்.
ONLY INDIAN TO SCORE TWO TRIPLE CENTURY IN TEST CRICKET.

சினிமாபேட்டை கிசு கிசு:
நவம்பர் மாதத்தில் இலங்கை உடனான டெஸ்ட் தொடரின் பொழுது இந்த விழா நடக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்து வந்த நிலையில் அவசரமாக நேற்று நடந்து முடிந்தது ஏன் என்று தான் தெரியவில்லை.