தொகுப்பாளினி என்றாலே ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இவரை பிடிக்காத ரசிகர்களே கிடையாது அனைவருக்கும் பிடித்தவர். அனைவராலும் மிகவும் பாராட்டப்படுபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

TV Anchor Divyadarshini

திவ்யதர்ஷினி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். பின்பு தொகுத்து வழங்குவதையும் தாண்டி இப்பொழுது அதிக படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார்.

divyadharshini

தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இதற்கு முன்பு தனுஷின் பா. பாண்டி என்ற படத்தில் நடித்து அசத்தினார் ,மேலும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் துருவ நட்சத்திரம் இந்த படத்தில் புதுவிதமான கெட்டப் போட்டுள்ளார், விரைவில் இந்த படம் வெளிவரபோகிறது.

divya dharsini

அந்த நிலையில் அடுத்து இவர் சினிமாவில் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு சிங்கிள் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலுக்கு டிடி நடிக்க, மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, கார்த்திக் பாடலை இசையமைத்ததோடு பாடியும் உள்ளார்.

dd

இந்த பாடல்டீசர்  வெளியாகி டிரண்டிங்கில் நான்காவது இடத்தில் இருந்தது. இதுகே இப்படின்னா இன்னும் பாடல் வந்த ஏவ்வளவு வரவேற்பு இருக்குமோ தெரியல பார்ப்போம்.