fbpx
Connect with us

Cinemapettai

தேவைப்பட்ட நேரம் அந்த நான்கு பரதேசிகளை காணோம்.. வீடியோ பண்ணி விவாகரத்தான கணவரை வச்சி செய்யும் டிடி?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேவைப்பட்ட நேரம் அந்த நான்கு பரதேசிகளை காணோம்.. வீடியோ பண்ணி விவாகரத்தான கணவரை வச்சி செய்யும் டிடி?

தமிழ்நாட்டில் சினிமா நடிகர் நடிகைகளை விட அனைவருக்கும் பரிச்சயமான பிரபலமாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. குணச்சித்திர நடிகையாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி திருமணம் செய்துகொண்ட வேகத்திலேயே விவகாரத்தையும் செய்து கொண்டார்.

அதற்கு கணவர், திவ்யதர்ஷினிக்கு ஆண் பழக்கங்கள் அதிகம் எனவும், இரவு நேரங்களில் குடியும் கூத்துமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அதை தொடர்ந்ததால் விவாகரத்து செய்தேன் என தெரிவித்திருந்தார்.

அதேபோல் திவ்யதர்ஷினியும், தன் மீது நம்பிக்கை இல்லாத நபருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து தன்னுடைய விவாகரத்து ஏற்றுக்கொண்டார்.

இதுநாள் வரையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த அவர்களது விவாகரத்து வாழ்க்கை தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் தொடங்கியுள்ளது.

அதற்கு விதை போடும் விதமாக, சமீபகாலமாக அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் வெளியிடுவது வீடியோ வெளியிடுவது என இருந்தார் டிடி.

தற்போது டப்ஸ்மாஷ் என்ற பெயரில் தனுஷ் நடித்த ரகிட ரகிட பாடலில் வரும் எனக்குத் தேவைப்படும் நேரம் அந்த நான்கு பரதேசியை காணோம் என்ற வரியை கணவரை நேரடியாக தாக்கும் விதமாக பதிவிட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திவ்யதர்ஷினி எதேர்ச்சியாக இந்த வீடியோவை வெளியிட்டாரா அல்லது வேண்டுமென்றே தனது கணவரை உசுப்பேற்றுவதற்காக வீடியோவை வெளியிட்டாரா என நான்கு பேர் கொண்ட குழு அதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க:- Click here

Continue Reading
To Top