Connect with us
Cinemapettai

Cinemapettai

dd-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் புருஷன் போனா என்ன, இன்னும் பல பேரை காதலிக்கலாம்.. விவாகரத்துக்குப் பிறகு சர்ச்சையை கிளப்பிய டிடி

சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் அது கை கொடுக்காமல் தொகுப்பாளராக களமிறங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர்தான் திவ்யதர்ஷினி என்ற டிடி. விஜய் டிவியில் மிகச் சிறந்த தொகுப்பாளினி என்ற பெயர் எடுத்தவர்.

அதுமட்டுமல்லாமல் பெண் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த சில வருடங்களிலேயே அவரை விட்டு பிரிந்து வந்து விட்டார்.

விவாகரத்துக்குப் பிறகு அவரது முன்னால் கணவர் பற்றி ஏதாவது ஒரு குறை சொல்வதையே வேலையாக வைத்துள்ளார் டிடி. அந்தவகையில் போகிற இடமெல்லாம் அவரைப்பற்றி டிடி தவறாக பேச, டிடியின் முன்னால் கணவரும் அவரைப் பற்றியும் அவரது இரவு பார்டிகள் பற்றியும் பல ரகசியங்களை வெளியே கொண்டுவர ரசிகர்கள் மத்தியில் டிடிக்கு இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய் விட்டது.

அதுமட்டுமில்லாமல் விவாகரத்து செய்ததை ஏதோ தேசிய விருது வாங்கியது போல அடிக்கடி பெருமையாக பேசிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விவகாரமான பதில் கொடுத்துள்ளார் டிடி.

ரசிகர் ஒருவர், என்றைக்காவது விவாகரத்து செய்து விட்டோமே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு டிடி, அதையெல்லாம் நான் திரும்பி பார்க்க கூட விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் இரண்டாவது காதல் வருமா என கேட்டதற்கு சினிமாவைப் போல இரண்டு, மூன்று காதல் செய்தாலும் தவறில்லை எனவும், ஆனால் ஒரே நேரத்தில் பல பேரை காதலிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

dd-cinemapettai-01

dd-cinemapettai-01

Continue Reading
To Top