Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் DD-யின் வலையில் விழுந்த பிரபலம்.. தம்மு அடிப்பேன் ஆனா?

dd

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் DD-யின் வலையில் விழுந்த பிரபலம்.. தம்மு அடிப்பேன் ஆனா?

பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விவாகரத்திற்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறார். டிடிக்கு விவாகரத்து ஆனது அவருக்கு சோகமோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுடன் உரையாட சமூக வலைதளப்பக்கங்களில் நேரடி வசதி மூலம் வந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் டிடி இடம் இவ்வளவு நாட்கள் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதை எல்லாம் கேட்டுவிட்டார்கள். அதற்கு டிடியும் கோபப்படாமல் பதிலளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு யாருடன் டேட்டிங் செல்ல வேண்டும்? என கேட்டதற்கு பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் செல்ல வேண்டுமென கூறியுள்ளார். மேலும் ஹன்சிகாதான் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் மனது வைத்தால் இது நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொரு ரசிகர் எப்பொழுது அம்மாவாக போகிறீர்கள்? என கேட்டதற்கு அன்னை தெரசா கூட அம்மாதான் என பதில் வைத்துள்ளார். மேலும் ரசிகர் ஒருவர் உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? என கேட்டதற்கு விவாகரத்து ஆகி நான்கு வருடங்கள் முடிந்து விட்டது என கூலாக பதில் சொல்லியுள்ளார்.

மேலும் டிடி இடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததா? என கேட்டதற்கு நீண்ட நாட்களாக இருந்ததாகவும் சமீபகாலமாக அப்பாவுக்காக புகை பிடிப்பது இல்லை எனவும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிது நேரம் சமூகவலைதளங்களில் கலகலப்பாக தனது ரசிகர்களுடன் உரையாடினார் டிடி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top