fbpx
Connect with us

Cinemapettai

யார் இடத்துல வந்து யார் சீன் போடுறது..? ஹைதராபாத்தின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி !

delhi_cinemapettai

யார் இடத்துல வந்து யார் சீன் போடுறது..? ஹைதராபாத்தின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி !

ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 6  விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்தது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கருண் நாயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் 30 ரன்களும், ஷிகர் தவான் 28 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங்  டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளுக்கு 70 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை  இழந்த ஹைதராபாத் அணி 185 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு சஞ்சு சாம்சன்(24),கருண் நாயர்(39),ரிஷப் பண்ட்(34), ஸ்ரேயாஸ் ஐயர்(33) ரன்கள் எடுத்து  இலக்கை எளிதாக்கினர்.

அடுத்ததாக வந்த  கோரி ஆண்டர்ஸன்  41 ரன்களும், மோரிஸ் 15 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top