ரிஷப் பண்ட, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி மிரட்டல் வெற்றி  பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை  செய்தன.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கருண் நாயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ரெய்னா 77 ரன்களும், தினேஷ் கார்த்திக் 65 ரன்களும் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 208 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  தமிழ் முன்னணி நடிகையின் கிளாமர் போஸால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான கருண் நாயர் 12 ரன்களில் விக்கெட்டை  இழந்து ஏமாற்றினார்.

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் கூட்டணி பாரபட்சமின்றி குஜராத் பந்துவீச்சை பதம் பார்த்து மளமளவென ரன் குவித்தது.

அதிகம் படித்தவை:  தன் அடுத்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

31 பந்துகளுக்கு 7 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்து வெளியேறினார், அடுத்ததாக ரிஷப் பண்டும் 43 பந்துகளுக்கு 9 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனையடுத்து வந்த கோரி ஆண்டர்ஸன் 18, ஸ்ரேயாஸ் ஐயர் 14 என தங்கள் பங்கை சரியாக செய்ய 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்த டெல்லி அணி 214 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.