fbpx
Connect with us

Cinemapettai

தனக்கு கொடுக்கப்பட்ட ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதை டேவிட் வார்னர் என்ன செய்தார் தெரியுமா ? புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் ரசிகர்கள்.

Sports | விளையாட்டு

தனக்கு கொடுக்கப்பட்ட ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதை டேவிட் வார்னர் என்ன செய்தார் தெரியுமா ? புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் ரசிகர்கள்.

டான்டனில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.  

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில், 307 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. வார்னர் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய இவர், 107 ரன்னில் ஆட்டமிழந்தார். கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில், 266 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ தோல்வியடைந்தது.

இந்த சதம் வார்னருக்கு மிகவும் ஸ்பெஷல் தான். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐசிசி விதித்த தண்டனையை விட, ஆஸ்திரேலிய போர்ட் கடுமையாக நடந்துக்கொண்டது. ஒரு வருடம் தடை முடிந்து வார்னர் மற்றும் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடும் சர்வதேச தொடர இது.

மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட வார்னர், நடந்து செல்லும் பொழுது இளம் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவருக்கு தனது “மேன் ஆப் தி மேட்ச்” விருதை அன்பளிப்பாக கொடுத்தார்.

தனக்கும் தனது டீமுக்கும் ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு தன் நன்றியை பகிர இது போல் அவர் செய்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரஸ் இடம் பேசும் பொழுது தன் மனைவி மற்றும் குழந்தைகள் தான் அந்த கடினமான சூழலில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top