ஐசிசி கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிதாக தணடனை கொடுக்கவில்லை. எனினும் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான தண்டனையை விதித்தது. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு ஒரு ஆண்டு விளையாட தடையும், பான்க்ராப்ட்டுக்கு 9 மாதம் தடை விதித்தது. மேலும் தடை முடிந்த பின் 12 மாதம் கழித்தே தலைமை பொறுப்புக்கு ஸ்மித், பான்க்ராப்ட் பரீசலனை செய்யப்படுவர் என்றும். வார்னர் வாழ்நாள் முழுக்க ஆஸி அணியின் கேப்டன் ஆக முடியாது என்று அறிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னரே மற்ற இருவீர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். தன்னிலை விளக்கத்தை அளித்தனர். எனினும் வார்னர் தன் தரப்பு வாதத்தை பற்றி வெளியே சொல்லவில்லை. இந்நிலையில் இன்று காலை பத்ரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். தான் முன்னரே கொண்டு வந்த காகிதத்தில் இருப்பதாய் மட்டுமே அவர் படித்தார். நிருபர்கள் கேட்ட கேள்வி எதற்கும் அவர் பதில் சொல்ல வில்லை. மேலும் தான் செய்த தவறுக்கு முழு பொறுப்பு அர்ப்பதாக்வும், தன்னை மன்னிக்குமாறும் அவர் வேண்டி கேட்டுக்கொண்டார்.

Former vice-captain David Warner

அவர் பேசியதில் இருந்து சில விஷயங்கள்…

‘என சகவீரர்களுடன் நான் களம் இறங்கப்போவதில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அணி என மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைத்து விட்டேன். அடுத்து என்ன செய்யவது என்று தெரியவில்லை. ஆனால் முதலில் என குடும்ப நலன் தான் முக்கியம்.

என மனதில் சிறிய நம்பிக்கை உள்ளது நான் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவேன் என்று, எனினும் அது நடக்காமலே கூட போகலாம். வரும் நாட்களில் நான் எப்படி பட்டவன், ஏன் இந்த செயலை செய்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனினும் எப்படி இதனை நிகழ்த்த போரேன் என்று தெரியவில்லை. மிக முக்கிய மாற்றங்களை நான் செய்துகொள்ள வேண்டும், அதற்கு சிலரிடம் அறிவுரை மற்றும் உதவியை நாடுவேன்.

என் மனைவி மற்றும் மகள்களின் பாசம் இல்லமால் எனக்கு வாழ்க்கை இல்லை. அவர்களை இப்படி ஒரு சங்கடத்தில் உட்படுத்தியது வருத்தம் அளிக்கிறது. துணை தலைவனாக என் கடமையை செய்ய தவறிவிட்டேன். மனைவி, டீம் நபர்கள், தென்னாபிரிக்கா நிர்வாகிகள் மற்றும் அணைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நான் என்றுமே ஆஸ்திரேலியாவுக்கு பெருமை தேடி தரவே எண்ணினேன். எனினும் அன்றைய தினத்தில் நான் எடுத்த முடிவு தவறானது. அணைத்து ஆஸ்திரேலிய மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

எந்த நிருபரின் கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றார் வார்னர். பின் சில மணி நேரத்தில் தன் ட்விட்டரில் இந்த கருத்துக்களை பதிவிட்டார்.

நிறைய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயல் முறை என்று ஒன்று உள்ளது. அதனை பின்பற்றுவேன், கூடிய விரைவில் சரியான இடம் மற்றும் நேரத்தில் அணைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். இதைப்பற்றி நான் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சொல்லி இருக்கவேண்டும். எனினும் என் குடும்பம் மற்றும் கிரிக்கெட் என பல விஷயங்களை கருத்தில் கொண்டு நான் செயல் பட வேண்டி உள்ளது. அதுவே சரி என்று நினைக்கிறேன்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இவ்வாறு கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது பல கேள்விகள் எழுந்துள்ளது. மற்ற இரண்டு வீரரும் மன்னிப்பு மட்டுமே கூறிய நேரத்தில் பல விஷயங்களை முன் நிறுத்தி வார்னர் பேசியுள்ளார். ஆஸ்திரேலியா போர்டை எதிரித்து ஏதேனும் செய்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.