பத்து வயது வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று பெண் ஒருவர் தனது 10 வயது மகளை அழைத்து வந்திருந்தார்.

அந்த சிறுமிக்கு வயிறு வீங்கியிருந்தது, பின்னர் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். சிறுமி என்பதால் அவர் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.

சிறுமி எப்படி கர்ப்பமானார் என அவரிடம் விசாரித்து போது, தனது வளர்ப்பு தந்தை அவரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் காரணமாகவே தான் கருவுற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் சிறுமியை கொன்று விடுவதாக அவர் தந்தை மிரட்டியுள்ளார்.

தற்போது இந்த விடயத்தை அறிந்த சிறுமியின் அம்மா இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.