புதன்கிழமை, நவம்பர் 13, 2024

பாண்டியனிடம் பணத்திமிரை காட்டி பேசிய மருமகள்.. கோமதிக்காக வக்காலத்து வாங்கிய மீனா, அடங்கிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியின் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட கோமதி, அம்மாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு அழ ஆரம்பித்து விடுகிறார். அதே மாதிரி அப்பத்தா மீது பாசத்துடன் இருக்கும் ராஜியும் ரொம்பவே ஃபில் பண்ணுகிறார்.

ஆனால் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து அப்பத்தாவை நினைத்து பீல் பண்ணும் இந்த நேரத்தில் அப்பத்தா ஆஸ்பத்திரியில் எனக்கு ஒண்ணுமே இல்லை நான் சும்மா டிராமா பண்ணினேன் என்று மருமகளிடம் சொல்லிவிட்டார். அதற்கு காரணம் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எப்பொழுது பார்த்தாலும் சக்திவேல் மற்றும் முத்துவேல் பிரச்சனை பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தான் நான் இப்படி ஒரு ட்ராமாவை போட்டேன் என்று சொல்லி மருமகளுடன் ஜாலியாக இருக்கிறார். இது எதுவும் தெரியாத சக்திவேல் மற்றும் முத்துவேல் வெளியே நின்று அம்மாவை நினைத்து அழுகிறார்கள். பிறகு சக்திவேலின் மனைவி உங்களை பார்த்தால் இன்னும் அத்தை டென்ஷன் ஆகிவிடுவார்கள். அதனால் டிஸ்சார்ச் ஆகும் வரை நீங்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

அதன்படி சக்திவேல், முத்துவேல் மற்றும் குமரவேலு அனைவரும் வீட்டிற்கு போய்விடுகிறார்கள். பிறகு ஆஸ்பத்திரியில் அப்பத்தா மருமகளுடன் ஜாலியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து பழனிச்சாமிக்கு கூட இந்த விஷயத்தை சொல்லாமல் அப்பத்தா தனக்கு உடம்பு சரியில்லாத போல் நடித்து விடுகிறார். ஆனால் இப்பொழுது உடம்புக்கு எந்த பிரச்சினை இல்லை என்று தெரிந்த நிலையில் பழனிச்சாமி வீட்டிற்கு போகிறார்.

பழனிசாமி அம்மாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை பயப்பட வேண்டாம் என்று கோமதியிடம் சொல்கிறார். ஆனால் கோமதி, அம்மா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். பிறகு பாண்டியன் உங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்லை என்று சொல்லியாச்சு. பிறகு ஏன் தேவையில்லாமல் அதே யோசித்துக் கொண்டிருக்கிறாய் போய் சமையல் வேலையை பாரு என்று சொல்லி அனுப்புகிறார்.

ஆனால் கோமதி இருக்கும் மனநிலைமைக்கு சமைக்க முடியாது என்பதால் மீனா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இருந்தாலும் நீ ஒருத்தியால எப்படி சமைக்க முடியும் என்று கேட்கும் பொழுது தங்கமயில் நான் உதவி பண்ணுகிறேன் என்று சொல்லியும் கோமதி வேண்டாம் என்று மறுத்து விடுவதால் தங்கமயில் அப்படியே அடங்கிப் போய் விடுகிறார். நீங்களும் ராஜ்யும் ரொம்பவே வருத்தத்தில் இருப்பதால் பேசாமல் கடையில் சாப்பாடு வாங்கிவிடலாம் என்று மீனா ஐடியா கொடுக்கிறார்.

கோமதி, கடையில் வாங்கினால் ரொம்ப செலவாகுமே என்று கேட்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் வீட்டிற்கு வந்த பொழுது இன்னும் சமைக்கவில்லையா என்று கேட்கிறார். உடனே மீனா, அத்தை மற்றும் ராஜி கொஞ்சம் அப்செட் ஆக இருப்பதால் வீட்டில் சமையல் செய்ய வில்லை. எனக்கும் எல்லாத்துக்கும் சமையல் செய்ய தெரியாது என்று சொல்லி, பேசாமல் இரவுக்கு மட்டும் நாம் அனைவரும் ஹோட்டலில் வாங்கி சாப்பிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

இதை கேட்டதும் பாண்டியன், ஹோட்டல் சாப்பாடு அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார். உடனே மீனா நல்ல பெரிய ஹோட்டலில் வாங்கலாம் என்று சொல்கிறார். அப்படி என்றால் அனைவருக்கும் வாங்க வேண்டும் என்றால் காசு தேவை இல்லாமல் அதிகம் செலவாகும். அதனால் வேண்டாம் என்று பாண்டியன் மறுப்பு தெரிவிக்கிறார்.

இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட மீனா, உங்களுக்கு பணம் தான் பிரச்சனை என்றால் என்னிடம் இருக்கிறது மாமா நான் தருகிறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே பாண்டியன் கோபத்துடன் மீனாவை பார்க்கிறார். அதாவது நீ பணம் சம்பாதிப்பதால் அந்த திமிரை என்னிடம் காட்டுகிறாயா என்று பார்ப்பது போல் பாடியனின் லுக் இருக்கிறது.

ஆனால் மீனா அந்த அர்த்தத்தில் கேட்டிருக்க மாட்டார். எதிர்ச்சியாக கேட்டது பாண்டியனுக்கு தவறாக தெரிகிறது. இந்த பிரச்சினையை வைத்து பாண்டியன் இன்னும் என்னெல்லாம் ஆடப்போகிறாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News