2021 தமிழக சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை எப்போது தெரியுமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்தே தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற சூழலில்,

அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

stalin-edappadi

அதாவது வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. அதேபோல் மார்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை செய்யப்படவுள்ளது. அத்துடன் மார்ச் 22ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வளவு நாள், தேர்தல் எப்போது? தேர்தல் முடிவு எப்போது வெளியிடப்படும்? என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழ்நிலையில், திடீரென்று தேர்தல் ஆணையம் இந்த செய்தியை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்