குணசேகரனுக்கு தரமான பதிலடி கொடுக்கப் போகும் தர்ஷினி.. கதிர் பிளானை தவிடு பொடியாக்கிய முட்டாபீஸ்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்து ஈஸ்வரியுடன் ஒட்ட ஆரம்பித்து விட்டார். இதனைப் பார்த்து கடுப்பான குணசேகரன், வீட்டில் இருப்பவர்களை மிரட்டி வெளியே போக சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி எங்க வாழ்க்கை நாங்க பார்த்துக்கொள்கிறோம். எங்களை வாழ விடுங்கள் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி. இப்பொழுது என்னுடைய மகளை நான் என்னுடன் கூட்டிட்டு போகிறேன் என்று தர்ஷினியை அழைத்துக்கொண்டு போகிறார்.

ஆனால் குணசேகரன், தர்ஷினி என்னுடைய மகள் அவள் என்னுடன் தான் இருக்கணும் என்று சொல்கிறார். இதை கேட்ட தர்ஷினியும் ஈஸ்வரியை விட்டுவிட்டு குணசேகரன் பக்கத்திற்கு போய்விட்டார். உடனே ஈஸ்வரி. தர்ஷினி நீ பயப்படாத. அம்மா இருக்கிறேன் என்னுடன் வா என்று கூப்பிடுகிறார்.

மாஸ்டர் பிளான் போடும் தர்ஷினி

அதற்கு தர்ஷினி, நீ வெளியே போமா நான் அப்பா கூட தான் இருப்பேன் என்று குணசேகரன் கையை பிடித்துக் கொண்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனைவரும் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டார்கள். அத்துடன் நந்தினி நாங்கல்லாம் இருக்கிறோம் நீ எதற்கும் பயப்படாதே என்று சொல்கிறார்.

ஆனாலும் தர்ஷினி அப்பா தான் முக்கியம் என்று குணசேகரன் கூட போய்விட்டார். ஆனால் இதற்குப் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால், தர்ஷினிக்கு தெரியும் குணசேகரனை எதிர்த்து எதுவும் பண்ண முடியாது என்று. அதனால் கூடவே இருந்து குழி பறிக்க வேண்டும் என்று தைரியமாக ஒரு பிளானை போட்டு குணசேகருக்கு தக்க பதிலடி கொடுக்கப் போகிறார்.

இதனை தொடர்ந்து கதிர் போட்ட பிளான் படி சக்தி, சித்தார்த்துடன் இருக்கிறார். இதை எப்படியோ கண்டுபிடித்த கரிகாலன் சித்தார்த்தை கடத்தி வைத்தால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். அத்துடன் பல விஷயங்களில் நான் பதிலடி கொடுத்த மாதிரி இருக்கும் என்று கரிகாலன் கதிர் போட்ட பிளானை தவிடு பொடியாக்க வேண்டும் என்ற நோக்கில் முட்டாள்தனமாக ஒரு முயற்சி எடுத்து விட்டார்.

அந்த வகையில் சித்தார்த் கரிகாலன் கஸ்டடிக்கு போகப் போகிறார். சக்தியும் கதிரும் இனி எப்படி குணசேகரனை தோற்கடிக்க போகிறார் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஆக மொத்தத்தில் தற்போது இந்த நாடகத்தின் கதை அங்கங்கே பாதியாக தொங்கிக்கொண்டு அந்தரத்தில் தவித்து வருகிறது.

Next Story

- Advertisement -