டேரன் சமி

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்- ரவுண்டர். முன்னாள் வீரர் என்றது ஆட்டத்தில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார் என்று நினைத்தால் அது தவறு. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட மனவருத்ததால், ஒப்பந்தம் கை எழுத்து இடாமல் இருப்பவர். உலகெங்கிலும் உள்ள டி 20 போட்டிகளில் விளைய்டிக்கொண்டு இருப்பவர்.

இந்நிலையில் மனிதர் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், “முடிந்துவிட்டது என்று நினைத்தேன், மீண்டும் மேரூன் ஜெர்ஸியை அணியப்போகிறேன். பாகிஸ்தான் நோக்கி புறப்படுகிறேன்.” என்று டீவீட்டினார்.

twitter

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டி 20 போட்டி விளையாடி வருகின்றது. இதில் தான் சமி விளையாட போகிறார் என அனைவரும் நினைத்த நேரத்தில், மீண்டும் ஒரு டீவீட்டை தட்டி விட்டார்.

twitter

“அட இவ்வளவு நபர்கள் ஆர்வமாக உள்ளனரே. என்னை மன்னித்து விடுங்கள் மக்களே. இது ஏப்ரல் ஒன்றுக்காக குறும்பாக போடப்பட்ட ட்வீட்” என்று பதில் சொல்லியுள்ளார்.

இந்த சீசனில் எந்த அணியின் சமியை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை. எனினும் காயம் காரணமாக ஏதுனும் வீரர் வெளியேறும் பட்சத்தில் மாற்று வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.