Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி சாம்ராஜ்ஜியம் – ‘தர்பார்’ ட்விட்டர் விமர்சனம்
Published on
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார். பொங்கல் வெளியீடாக இன்று திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
குறிப்பாக முதல் பாதியில் முழுவதுமாக எண்பது தொண்ணூறுகளில் பார்த்த ரஜினி போலிருக்கிறதே என அவரது ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இரண்டாவது பாகம் முருகதாசுக்கு உரிய பாணியில் தயாராக இருப்பதாகவும் விமர்சனம் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் இளமை தோற்றத்துடன் தோன்றும் ரஜினி ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தர்பார் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
