Connect with us
Cinemapettai

Cinemapettai

darbar-review

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் படத்தை அலேக்கா தூக்கிய பிரபல டிவி சேனல்.. இனி ப்ரோமொஷன்க்கு பஞ்சம் இல்லை

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை சர்காருக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரோடக்சன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

இந்நிலையில் தர்பார் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் யூடியூப் களில் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை தர்பார் டிரைலரை 7 மில்லியனுக்கும் மேல் பார்த்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமூக கருத்துக்களிலிருந்து கொஞ்சம் விடுபட்டு ரஜினிக்கே உரிய பாணியில் அதிரடியுடன் ட்ரைலர் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன்டிவி கைப்பற்றியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களையும் ஜீ தமிழ் டிவி தான் கைப்பற்றும்.

ஆனால் தற்போது ரஜினிகாந்த் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதால் அந்த படத்தை எளிதாக சன் டிவி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top