fbpx
Connect with us

Cinemapettai

அரைத்த மசாலாவா தர்பார்! என்னா சொல்லுது டிரெய்லர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரைத்த மசாலாவா தர்பார்! என்னா சொல்லுது டிரெய்லர்

ரஜினி பல வருடங்களுக்கு பிறகு போலீசாக நடித்துள்ள படம் தர்பார். பேட்ட படத்தில் உண்மையிலேயே ரஜினி ஹீரோவாக நடித்தாரா அல்லது வில்லனாக நடித்தாரா என்று கேட்கும் அளவுக்கு ஆக்சன் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். படமும் படு ஸ்பீடாக இருந்தது.

ஆனால் இந்த படத்தில் அப்படியே எதிர்மாறாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் மும்பையில் போலீஸ் கமிஷ்னர் வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார்.

வழக்கம் போல் முதல் சீனே வில்லன்களை காட்டிய மெர்சலாக்கிவிட்டு தலைவா என்று ரஜினியை மாஸாக காட்டுகிறார் முருகதாஸ்.. அதாவது ‘போலிஸ்காரான சார் அவன் கொலைக்காரன்’ என்று வில்லன் சொல்லுகிறார். அதற்கு முன்னதாக கத்தியால் சுற்றியுள்ள அத்தனை மாறி சீவி சாய்க்கிறார்.

இந்த கட்சிக்குபிறகு மாஸாக ஒரு நடை நடக்கும் ரஜினி, ஆதித்யா அருணாச்சலம் மும்பை போலீஸ் கமிஷ்னர் என்று ரஜினி சொல்கிறார். இப்படி வரும் ரஜினி போலீஸ்கார்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

அப்படி அடுத்த சீன் சும்மா கிழி பாடல் வருகிறது. நயன்தாராவின் என்ட்ரியும் ஆரம்பம் ஆகிறது. ரஜினி நன்றாக டான்ஸ் ஆடுகிறார்.

இதன்பிறகு படத்தின் வில்லன் என்ட்ரி ஆகிறார். மும்பை போலீஸ் உயிருக்கு பயந்தவர்கள் என்று நான் காட்டுகிறேன் என்று சொல்லி பல போலீஸ்கார்கள் கொல்லப்படுகிறார்கள்.

அதன்பிறகு ரஜினி கேம் ஆடுறாங்க நம்ம கிட்டயே, என்கிறார். இன்னொரு காட்சியில் சார அவங்கிட்ட சொல்லிவச்சுக்கங்க.. போலீசுகிட்ட லெப்ட்ல வச்சுக்கங்க, ரைட்ல வச்சுக்கங்க ஆனால் ஸ்டிரெய்ட்டா வச்சுக்காதீங்க.. என் வழி தனி.. என்றும் தனி வழி.. என்று ஸ்டைலாக நடந்து ஹெலிகாப்டரில் பறக்கிறார். அதன்பிறகு ஐஎம்எ பேட் கார் என்று ஒரு வசனம் பேசுகிறார். இன்னொரு இடத்தில் நான் ஒரிஜினலாகவே வில்லன் என்கிறார்.

இதன் மூலம் போலீஸ் மற்றும் வில்லன்கள் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. அந்த வில்லனை ரஜினி எப்படி பந்தாடுகிறார் என்பதே கதையாகவும் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. படத்தின் ஒன்லைன்இதுதான் என்றாலும் திரைக்கதை ரஜினிக்கு ஏற்ப சுவராஸ்யமாக முருகதாஸ் அமைத்திருப்பார் என்று நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top