Connect with us

Cinemapettai

வந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. “I am a bad cop”.. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி!

darbar-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வந்தாச்சு தர்பார் டிரெய்லர்.. “I am a bad cop”.. 26 வருஷத்துக்கு பின் போலீசாக ரஜினி மாஸ் என்ட்ரி!

நடிகர் ரஜினி காந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் இன்று(திங்கள்கிழமை) மும்பையில் வெளியிடப்பட்டது.

தனது 167வது திரைப்படமாக இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 26 வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகை நயன்தாரா, ரஜினிக்கு ஜோடி நடித்துள்ளார். பேட்ட படத்தை தொடர்ந்து தர்பாரிலும் அனிருத் இசையமைத்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பட்டிதொட்டி எங்கும் ‘சும்மா கிழி’ பாடல் ரசிகர்களின் காதுகளை கிழித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று மாலை 6.30 மணிக்கு டிரெய்லர் வெளியாகவில்லை. கொஞ்சம் தாமதமாக 6.55 மணிக்கு வெளியானது.

தர்பார் ட்ரெய்லரை ரஜினி பேசும் வசனங்களாக “உண்மையிலேயே நான் வில்லன்”, “Iam a bad cop”, போலீசுகிட்ட ரைட்ல வச்சுக்க, லெஃப்ட்ல வச்சுக்க ஆனா ஸ்ட்ரெயிட்டா மட்டும் வச்சுக்காத” என்றும் ரஜினி பேசும் டயலாக்குகள் செம்ம டிரெண்டாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top