Tamil Cinema News | சினிமா செய்திகள்
போலிஸ் அதிகாரியாக ஸ்டைலான நடையில் மிரட்டும் ரஜினி.! தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையதளத்தில் லீக்.! வீடியோ உள்ளே
By
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
மேலும் படத்தை மிகவும் பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது, சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது அதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் படப்பிடிப்பு மும்பையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படத்தில் இருந்து அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தார்கள், இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரஜினி போலீஸ் காரை நிறுத்திவிட்டு மிகவும் வேகமாக நடந்து செல்கிறார் மேலும் படத்தில் ரஜினி உயர் போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
video ???? pic.twitter.com/azRhWgqTXQ
— RAJINIKANTH FANS CLUB (@RAJINIKANTHFAN8) June 4, 2019
