Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார்ல சூப்பர் ஸ்டார் எதுல ஸ்பெஷலிஸ்ட் தெரியுமா? தெரிஞ்ஜா சும்மா அதிரும்ல
By

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே படப்பிடிப்பு நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
தற்போது மும்பையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து விட்டதாகவும் அதனால் ரஜினிகாந்த் ஒரு வாரத்திற்கு சென்னையில் ஓய்வு எடுப்பார் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாகவும் அதில் ஒரு வேடம் தான் போலீஸ் வேடம் என்றும் மேலும் இப்படத்தில் அவர் ‘என்கவுண்டர்’ ஸ்பெஷலிஸ்டாக நடிப்பத்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்த ஊழியர்கள அனைவரிடமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் படப்பிடிப்பு நடந்த காலத்தில் முஸ்லிம் மக்களுக்கான ரம்ஜான் காலம் என்பதால் அங்கு வேலை பார்த்த முஸ்லிம் கலைஞர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

darbar
