தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் கசிந்தது.! உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்

darbar : சூப்பர் ஸ்டார் ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது மேலும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகியுள்ளார், நயன்தாரா பல வருடத்திற்கு முன்பு ரஜினி படத்தில் நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது படத்தில் ரஜினி டபுள் ரோல் என்று தகவல் கிடைத்துள்ளது இதில் அப்பா ரஜினி சமூக ஆர்வலராகவும், மகன் ரஜினி போலீசிலும் கலக்குகிறார்கள்.

அதேபோல் படத்தில் அப்பா ரஜினி  பிளாஷ்பேக்கில் தான் வருவாராம், மேலும் முழுக்க முழுக்க மும்பையில் நடைபெறும் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது தர்பார்.

Leave a Comment