Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் அறிமுக பாடலை சும்மா கிழிக்க போகும் பாடகர்.. தர்பார் அதிரடி அப்டேட்
தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை பாட போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமல்ல பொதுவான இசை ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் ரஜினியின் அறிமுக சீன் எந்த அளவுக்கு ஒரு படத்திற்கு முக்கியமோ அதேபோல ரஜினியின் அறிமுக பாடல் பாடப் போவது யார் என்ற கேள்வியும் மிகவும் முக்கியம்.
படையப்பா, அண்ணாமலை, பாட்ஷா என அனைத்து படங்களிலும் ரஜினியின் அறிமுகப்பாடல் மிகவும் முக்கியமாக இருந்தது. இவை அனைத்திலும் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடி ரசிகர்களை தியேட்டரில் ஆரவாரம் செய்ய வைத்துவிடுவார். அப்படித்தான் இந்தப் படத்திலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்பி பாலசுப்ரமணியன் பாடவேண்டும் என்று பலரும் ஆசை கூறினார்கள்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் அறிமுக பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடினால் மிகவும் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தார். முன்பு போல் இல்லாமல் தற்பொழுது ரஜினி இயக்குனர்களிடம் அனைத்தையும் விட்டு விடுவார் நம் தலையீடு இருக்கக்கூடாது.
இயக்குனர்களுக்கு ஒத்துபோகும் இசையமைப்பாளர்கள் என அனைத்தையும் விட்டுக் கொடுத்தார். அதைப் போலவே முருகதாசுக்கும் அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்தார். அதனால் வழக்கமாக ஏ ஆர் ரகுமான் இல்லாமல் அனிருத் போன்ற இளம் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என தொடங்கும் ரஜினியின் அறிமுக பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாட வைத்துவிட்டாராம். ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம் இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் எப்பொழுது பாடல் வரும் என்று ஏக்கத்தில் உள்ளனர். ரசிகர்கள் எண்ணத்தை புரிந்து விரைவில் தனது பாடல் பற்றி விவரங்களை அறிவிப்பார் என சினிமா வட்டாரம் கூறுகிறது.
