தர்பார் பர்ஸ்ட் லுக்கில் இதை கவனித்தீர்களா.! செம்ம மாஸ் தகவல் இதோ

darbar firstlook : ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 167 படத்தில் நடிகை இருக்கிறார் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட இருந்தார்கள், அதேபோல் காலை 8.30 அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், அதேபோல் படத்திற்கு தர்பார் என பெயர் வைத்துள்ளார்கள், மேலும் படத்தை நாளை மும்பையில் தொடங்க இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.

பர்ஸ்ட் லுக்கில் இதை கவனித்தீர்களா.?

இன்று வெளியான பர்ஸ்ட் லுக்கில் பல தகவல்கள் கிடைத்துள்ளன, பர்ஸ்ட் லுக்கில் ரஜினிக்கு பின்னாடி இரண்டு துப்பாக்கிகள், போலீஸ் நாய், மற்றும் குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப், அதுமட்டுமில்லாமல் மேப் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

இதை வைத்து பார்க்கப்போனால் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிகிறது, மேலும் ஃபர்ஸ்ட் லுக் இல் மும்பை என்ற வார்த்தை தலைகீழாக வைத்துள்ளார்கள், இதை வைத்துப் பார்த்தால் மும்பையில் நடக்கும் நிகழ்வை பொருத்து கதை அமையும் என தெரிகிறது.

மேலும் ஒரு மாஸ் வசனம் இந்த பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது, நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா, நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற வசனம் தான் அது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற வசனத்தை போல் இந்த வசனமும் இருக்கிறது

Leave a Comment