Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்பார் நஷ்ட விவகாரம் உண்மையா? ரஜினிகாந்தை சந்திக்கும் விநியோகிஸ்தர்கள்
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த நிலையில் விநியோகஸ்தர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான லாபத்தை கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
இதனால் நொந்து போய்க் கிடக்கும் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை அணுகி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டிய நிவாரணம் கிடைக்காததால் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விநியோகஸ்தர்கள் முறையிட முடிவு செய்துள்ளார்களாம்.
படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்று செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒன்று கூடி பேசினார்கள்.
ரஜினிகாந்தை சந்திக்க முடியாததால் விரைவில் விநியோகஸ்தர்கள் தரப்பில் கலந்தாலோசித்து எந்தெந்த மாவட்டங்களில் படம் எவ்வளவு நஷ்டம் என்று முடிவெடுக்கப்பட்டு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து முறையிடவும் விநியோகஸ்தர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.
தர்பார் படம் சில விநியோகிஸ்தர்களுக்கு உண்மைலேயே நஷ்டமா? அல்லது ரஜினியிடம் பணம் கேட்டால் அவர் கொடுப்பார் என திட்டமா? என தெரியவில்லை. இதனை அதிகாரபூர்வமாக அவர்கள்தான் கூற வேண்டும். ஏற்கனவே சில முறை ரஜினி அவர்களை அழைத்து பணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
