தர்பார் படத்தின் அறிமுக பாடலை தெறிக்க விடப் போகும் பிரபல பாடகர்..! என்ன ஒரு சென்டிமென்ட்

மும்பையின் நடைபெற்று வந்த முதல்கட்ட  தர்பார் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில்  பிரதிக் பாபர், தலிப் தஹில்,ஜிதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ், என தர்பார் படத்தில் தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகமும்   நடிகர் நடிகைகளும் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது படத்தின் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அனைத்து வெற்றி பெற்ற படங்களுக்கு இவர் அறிமுக பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ட படத்திலும் மரண மாஸ் என்ற  அறிமுக பாடலை அவர் தான் பாடியுள்ளார்.

Leave a Comment