Politics | அரசியல்
கமல் போஸ்டரில் சாணி அடித்துள்ளேன்.. லாரன்ஸ் சர்ச்சை பேச்சிற்கு விளக்கம்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
நேற்று தர்பார் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடன இயக்குனரும் நடிகருமான லாரன்ஸ் நேற்று மேடையில் கமலைப் பற்றிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் கமலின் போஸ்டருக்கு சாணி அடித்ததாக கூறியுள்ளார், ஆனால் தற்போது கமல் மற்றும் ரஜினி இணைந்து இருப்பதைப் பார்க்கும் போது ஏதோ ஒரு மாற்றம் நடக்கும் கண்டிப்பாக என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ரஜினி பப்ளிசிட்டிக்காக இது போன்று செய்கிறார் என்று கூறுபவர்களுக்கு லாரன்ஸ் பதிலளித்துள்ளார், பப்ளிசிட்டி என்றாலே அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இந்த வயசுல ஏன் அரசியலுக்கு வாரார் தெரியுமா? உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்.
மெரினாவில் கருணாநிதிக்கு பல போராட்டத்திற்கு பின் இடம் கிடைத்தது அப்போது ஸ்டாலின் அழுதார், அந்த சூழ்நிலையில் எனக்கு ஸ்டாலின் முதல்வர் ஆனால் நல்லா இருக்குமோ என்று தோன்றியது இவ்வாறு லாரன்ஸ் மேடையில் கூறினார்.
கடைசியாக யாராச்சும் என் தலைவனை பற்றி பேசினால் கண்டிப்பா நான் திரும்ப பேசுவேன் என்று உரையை முடித்துக்கொண்டார். கமல் போஸ்டர் மீது ஒரு காலத்தில் சாணி அடுத்ததாக கூறிய சர்ச்சை பேச்சு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அனைத்து உரையாடல்களையும் தெளிவாகக் கேட்டு பார்த்தால் இவர் சீமானையும் தாக்கிப் பேசி உள்ளதாக தெரிகிறது. சீமான் மக்களிடையே நல்ல வளர்ந்துவரும் ஒரு தமிழன் அவரை இதுபோன்ற பொதுமேடைகளில் அவமானப்படுத்துவது சரி அல்ல.
இதனால் தற்போது லாரன்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார், தலைவர் மேடையில் தவறாக தாக்கி பேசினார் தலைவருக்கு பிடிக்காது என்று சொல்லியே இவ்வளவு மோசமாக பேசியுள்ளார் என்று கூறலாம். மக்களுக்கு தெரியும் யார் நியாயம் ஆனவர்கள், யார் மக்களோடு நின்று போராடுவார்கள் என்பது, இந்த வீடியோவின் கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் திட்டி திர்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மன்னிப்பு கேட்டு போட்ட போஸ்டரில் ரசிகர்களே மரண திட்டு வாங்கிய முதல் நடிகர் என்றே கூறலாம்.
Watch the full video of My speech at Darbar audio launchhttps://t.co/PdvI3FZ2YR pic.twitter.com/7eOJH5Zag5
— Raghava Lawrence (@offl_Lawrence) December 7, 2019
