Videos | வீடியோக்கள்
போலீஸ் அவதாரம் எடுத்த வரலட்சுமி.. தெறிக்கும் டேனி டீஸர்
Published on
சிம்புவுடன் போடா போடி படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரபல நடிகரின் மகள் வரலட்சுமி. ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த வரலட்சுமி, கடந்த சில படங்களாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார் போலீசாக கலக்கும் டேனி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வரலட்சுமியையும் தாண்டி நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தை சத்தியமூர்த்தி இயக்கியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
