தலைப்புச் செய்திகளில் வர வேண்டுமென்றால் என்ன வேணாலும் பேசலாமா? பாகிஸ்தான் வீரருக்கு பதிலடி!

இந்திய வீரர்களை வம்பிழுத்து பார்ப்பது என்றால் எப்பொழுதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரு அளவில்லாத மகிழ்ச்சி. அந்த வீரருடன் இந்த வீரரை ஒப்பிடுவது, இந்த வீரரை எளிதில் வீழ்த்தி விடலாம், அந்த வீரரின் பந்தை எளிதில் அடித்து துவம்சம் செய்யலாம், என எப்பொழுதுமே வாய்ச்சவடால் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது அமீர் இந்திய வீரர்களை பழித்துப் பேசியுள்ளார். தன்னுடைய 29-ஆம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார் அமீர். இதற்கு காரணம் பாகிஸ்தான் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் தன்னை மனரீதியாக கஷ்டப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்ததாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

Amir1-Cinemapettai.jpg
Amir1-Cinemapettai.jpg

இப்பொழுது அமீர் இந்திய வீரர்களாகிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் விக்கெட்டை எளிதில் தான் வீழ்த்தி விடுவதாகவும். ஏற்கனவே அவர்களுக்கு பந்துவீசி மிகவும் சிரமப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படிப் பேசிய அமீரின் இந்தப் பேச்சைக் கேட்ட அவர் நாட்டு வீரரே அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். தலைப்புச் செய்திகளில் வர வேண்டும் என அமீர் இப்படி பேசியுள்ளார். மேலும் அமீர் இந்தியாவுடன் குறைந்த அளவிலான போட்டியிலேயே பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கையில் இவ்வாறு பேசுவது குழந்தைத்தனமான பேச்சு எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா.

Danishkaneria-Cinemapettai.jpg
Danishkaneria-Cinemapettai.jpg

மேலும் கனேரியா கூறுகையில் மொத்தமாக 60 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அமீரின் இந்த பேச்சு மிகவும் வேடிக்கையானது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதற்கு முன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை பாகிஸ்தான் அணியின் அப்துல் ரசாக் வம்பிளுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Razaq-Bumrah-Cinemapettai.jpg
Razaq-Bumrah-Cinemapettai.jpg
- Advertisement -spot_img

Trending News