Photos | புகைப்படங்கள்
வெளியானதா தளபதி 63 யில் டேனியல் பாலாஜி அவர்களின் ஹேர் ஸ்டைல் போட்டோ ?
தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் தன் ட்விட்டரில் டேனியல் பாலாஜி போட்டோ பதிவிட்டுள்ளார்.
விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம். இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, சௌந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் செல்கிறதாம்.
இப்படத்தில் டேனியல் பாலாஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை படத்திலும் நடித்துள்ளார். விரைவில் gangs of மெட்ராஸ் ரிலீசாக உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகிய சித்தி சீரியலின் கதாபாத்திரமும் உடன் இணைந்து டேனியல் பாலாஜி ஆனவர் இவர். சில திணைகளுக்கு முன் கூட ஆவடியில் புதிதாக ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டி பூஜை செய்தார்.
Hairstyle for current project. pic.twitter.com/bioRMEV8hh
— Daniel Balaji (@DanielBalajioff) March 26, 2019
இந்நிலையில் இன்று தன் ஹேர் ஸ்டைல் போட்டோ பதிவிட்டுள்ளார்.

Daniel Balaji
எனினும் இது போலி கணக்கு, அவரின் ஒரிஜினல் இல்லை என்றும் தளபதி ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். ப்ளூ டிக் இல்லாத காரணம் ஒன்று. அடுத்ததாக அவ்வளவு எளிதில் அட்லீ போட்டோவெல்லாம் பதிவிட விடமாட்டார் பாஸ் என்பதும் இருக்கிறது.
