Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 63 பட வாய்ப்பு எப்படி வந்தது.. டேனியல் பாலாஜி சொல்லும் விளக்கம்
தளபதி 63 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
Thalapathy 63: தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்கள் நடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் தற்போது தளபதி 63 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது ஒரு தொகுப்பாளர் தளபதி 63 பட வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது என கேட்டார். அதற்கு டேனியல் பாலாஜி “அட்லி எனக்கு போன்பன்னி ஆபிசுக்கு வர சொன்னார். பின்பு விஜய் சார் வைத்து நான் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு டேனியல் பாலாஜி உடனே ஓகே சொல்லி விட்டேன் எனக் கூறியுள்ளார்”.
ஏனென்றால் விஜய் சார் படம் ஒரு பக்கம் இருந்தாலும் அட்லி மூன்று படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இப்படத்தில் நான் நீங்கள் எல்லோரும் ரசிக்கும் வில்லனாக நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
