ராம்கோபால் வர்மா சமீபகாலமாக சர்ச்சை இயக்குனர் என்ற பெயரிலிருந்து ப்ரமோஷன் பெற்று தற்போது கில்மா பட இயக்குனராக வலம் வருகிறார். தன்னுடைய பெயரில் தானே ஒரு OTT தளம் உருவாக்கி அதில் மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவு கவர்ச்சியில் ஒரு படத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். ஒரு முறை அந்த படத்தை பார்க்க சுமார் 200 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் படங்கள் தரமாக இருப்பதால் தாறுமாறாக காசுகளை செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிளைமாக்ஸ், நேக்டு நங்கே நக்னம் என்ற படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அப்ஸரா ராணி என்ற மாடல் அழகியை வைத்து டேஞ்சரஸ் எனும் படத்தை எடுத்துள்ளார்.
டேஞ்சரஸ் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. பெண்களின் ஓரினச்சேர்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் டேஞ்சரஸ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றை வெளியிட்டு படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளார் ராம்கோபால் வர்மா.