Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு பாம்பின் விலை பல லட்சம், கடும் விஷம், படு விற்பனை!
பாம்பின் பெயர் கோல்டன் லான்ஸ்ஹெட். அரிய வைகையான இந்த பாம்பின் விலை ரூ. 20 லட்சம். ஆம், இந்த பாம்பை பிடித்து தருபவருக்கு ரூ.20லட்சம் வெகுமானம். மிகவும் கொடிய விஷம் உடைய இந்த பாம்பு சாதாரணமாக எங்கும் பார்க்க முடியாது.
தற்போது வரை இந்த கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர், பிரேசில் நாட்டில் உள்ள சாப்போலோ என்ற இடத்தில் உள்ள Queimada Grande, என்ற தீவில் தான் காணப்படுகிறது. இந்த பாம்பு கடித்த 2 நிமிடங்களில் உயிரிழப்பது நிச்சயம்.
ஆனால், சிலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், இந்த பாம்பை பிடித்து, கள்ள சந்தையில் விற்கின்றனர். காரணம் இந்த பாம்பு கள்ளசந்தையில் நல்ல விலை போகிறது . சிலர் இந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
இதனால், பிரேசில் அரசு இந்த தீவை மூடி வைத்தது மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்தது. ஆனால், சிலர் சட்ட விரோதமாக இந்த பாம்பை வேட்டையாடி கள்ள சந்தையில் விற்று வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
