தங்கல்’ படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்த பாத்திமா சனாவின் புகைப்படம் இணையதளத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தங்கல்’ படத்தில் அமீர்கான் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். படத்தில் பாத்திமாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். பாத்திமா தற்போது ஓய்வெடுக்க மாலத் தீவு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைக் கூறி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  சிம்புவின் ஹிட் ஆனா அந்த படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டியிருந்தது தெரிமா...!!!

குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் இப்படி ஒரு புகைப்படத்தை எப்படி வெளியிடுவீர்கள் என அவரைக் கேள்வி கேட்டு வருகின்றனர். பாத்திமா வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்கள் அப்படி ஒன்றும் கிளாமரான புகைப்படங்களாகத் தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  சினிமா பிரபலங்கள் இந்த வருடம் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு பக்கம் அந்தப் புகைப்படங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அவர் எந்த ஆடை அணிவது என்பது அவருடைய சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்ற கருத்துக்களும் கமெண்ட்டுகளில் இடம் பெற்றுள்ளன.