Connect with us
Cinemapettai

Cinemapettai

சார்பட்டா டான்சிங் ரோஸ் ரோலுக்கு இந்த பாக்ஸர் தான் இன்ஸ்பிரஷன்.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சார்பட்டா டான்சிங் ரோஸ் ரோலுக்கு இந்த பாக்ஸர் தான் இன்ஸ்பிரஷன்.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!

பா ரஞ்சித்தின் சார்பட்டா பீரியட் பிலிம், வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் பற்றிய படம். 70 களில் வட சென்னையில் “ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை” எந்தளவுக்கு பிரபலம், அதன் பின் உள்ள வாழ்வியல் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம்.

கபிலன் என்ற ரோலில் ஆர்யாவின் வாழ்க்கை, அவர் சந்திக்கும் சவால்கள் என படம் சென்றாலும் அணைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே எழுதியுள்ளார் இயக்குனர். படம் பார்த்த பின்பு நமக்கு ஆர்யாவின் வெற்றி மகிழ்ச்சி தந்தாலும், வேற சில கதாபாத்திரங்களும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

அப்படி ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்த ரோல் எனில் அது டான்சிங் ரோஸ் (Dancing rose) என்ற கதாபாத்திரம். கைதட்டல்களை அள்ளி வருகிறது. சபீர் என்பவர் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் அடங்க மறு, ரஜினியின் பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் பயிற்சி வீடியோ வெளியாகி லைக்ஸ் குவித்ததது.

இந்நிலையில் இதே போன்ற ஸ்டைலில் பாக்சிங் செய்த வீரர் பற்றிய தகவல் இணையத்தில் உள்ளது. பிரிட்டனை சேர்ந்த பிரின்ஸ் நசீம் அஹமத் தான் அவர். ஸ்டைலாக நடப்பது, ஆடுவது எதிராளியை சீண்டுவது, நொடிப்பொழுதில் நாக் அவுட் செய்வது இவரது ஸ்பெஷாலிட்டி.

dancing rose

தான் பங்கேற்ற 37 போட்டிகளில் 36 இல் வெற்றிபெற்றவர், 31 முறை நாக் அவுட் செய்துள்ளார் என்பது கூடுதல் ஸ்பெஷல் விஷயம். இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பையொட்டி ரசிகர்கள் தொடர்ந்து பா ரஞ்சித்திடம் டான்சிங் ரோஸ் என்ற பெயரில் தனியாக அவருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top