தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் சிவசங்கர். இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தும், கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார். வரலாறு படத்தில் அஜித்தின் வித்தியாசமான கெட்டப்புக்கு பயிற்சியளித்தவர் இவர்தான்.

சமீபத்தில் இவரின் மருமகள் தன்னை கணவனுடன் வாழ சிவசங்கர் தடுப்பதாக கூறி அவரின் வீட்டின் முன்பு தர்ணா செய்தார்.இதற்கு பதிலளித்துள்ள சிவசங்கர், எனது மகன் விஜய் கிருஷ்ணா- ஜோதியை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்தார்.

நாங்கள் ஜோதி குடும்பத்திடம் வரதட்சணை கேட்கவில்லை. திருமணம் முடிந்து இருவருக்கும் சண்டை வந்ததால் தனிக்குடித்தனம் வைத்தோம். அப்போதும் சண்டை தொடர்ந்ததால் எனது மகன் ஜோதியுடன் வாழ விரும்பாமல் எங்கள் வீட்டுக்குவந்துவிட்டார். அவரும் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஆனால் தற்போது மகன் சேர்ந்து வாழ தயாராகஇருக்கிறான். ஆனால் ஜோதி குடும்பத்தினர் எங்களை மிரட்டி சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார்கள். ரூ.10 கோடி கேட்டு மிரட்டுகின்றனர்.முதல்வர் தான் இப்பிரச்சனையில் தலையிட்டு எங்களை காப்பாற்றவேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.