Connect with us
Cinemapettai

Cinemapettai

anitha-sampath-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிதாவை கிண்டலடித்த சிம்பு படத்தின் டான்ஸ் மாஸ்டர்.. வெளுத்து வாங்கிய அனிதாவின் கணவர்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்-4ல் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் கன்டஸ்டன்ட்ஸ் தான் செய்தி வாசிப்பாளர் அனிதா.

இவர் சென்ற வாரம், தான் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி கண்ணீருடன் உருக்கமாக பேசியதற்கு சில ரசிகர்கள் ஆதரவையும், சிலர் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த சமயத்தில் “அனிதாவின் பேச்சில் சோகம் இல்லை! செய்தி வாசிப்பது போல படபட படவென வேகமாக பேசுகிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.

anitha-sampath-4

anitha-sampath-4

இவர் முதல் முதலாக ‘மானாட மயிலாட’ ரியாலிட்டி ஷோவின் டைட்டில் வின்னர்ராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, அதன்பின் ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் வினைக்கும், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவிற்கும் நண்பராக நடித்ததன் மூலம் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் அனைத்து பாடல்களும் நடன இயக்குனராக இருந்தார்.

தற்போது சதீஷின் ட்விட்டர் பதிவிற்கு அவருடைய கணவன் பிரபாகரன் “ஏண்டா.. நீங்க, பசினா என்னனு தெரியாம வளர்ந்திருந்தால், கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசிய தெரிய வாய்ப்பில்லை.

இப்படிதான் அடுத்தவன் அனுபவிச்ச பசியையும் வலியையும் கூட கிண்டல் பண்ண தோனும். பின்குறிப்பு: டான்ஸ் மாஸ்டர் என்றால் டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்தில் ஆடாதீங்க..” என சரமாரியாக சதீஷ்-ஐ வெளுத்து வாங்கிவிட்டார் அனிதாவின் கணவன் பிரபாகரன்.

Continue Reading
To Top