எனக்கு டான்ஸ் தான் முதல, நடிப்புல அப்புறம் தான்.. இயக்குனர்களை கடுப்பேற்றிய சந்திரமுகி நடிகர்

சினிமாவில் களமிறங்கும் பல நடிகர்கள் தங்களது திறமைகளை ஏதாவது துறையில் நன்கு வளர்த்துக்கொண்டு பின்னர் அந்த திறமையை வைத்தும் தங்களது நடிப்பு திறனாலும் மக்களை கவர்ந்து வருவர். அதிலும் நடன கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் படங்களில் கதாநாயகர்களாகவோ, துணை நடிகர்களாகவோ நடித்து வரும் பச்சத்தில் அவர்களுக்கு மற்ற நடிகர்களை காட்டிலும் ரசிகர்களிடம் மவுசு அதிகம்.

அப்படி அழகு, திறமை,ரசிகர்கள் என இவையெல்லாம் இருந்தும், எனக்கு என் நடன கலை தான் முக்கியம் என தனக்கு வந்த பட வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு சென்ற நடிகரை பற்றி பார்க்கலாம். 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நாசர், நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டரான படம் தான் சந்திரமுகி.

Also Read: ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

பி.வாசு இயக்கிய இப்படம் பலி வாங்க துடிக்கும் ஆத்மாவின் திகிலூட்டும் கதையில், பிரம்மாண்டமான பொருட் செல்வில் உருவாக்கப்பட்ட படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு இந்திய சினிமாவையே திரும்பி பார்கக வைத்தது. இப்படத்தில் நடன கலைஞராகவும், மாளவிகாவிற்கு ஜோடியாகவும் நடித்தவர் தான் நடிகர் வினீத். கிளைமாக்ஸ் காட்சியில் ஜோதிகாவுடன் இவர் ஆடும் ரா ரா பாடல் நடனத்தை யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு தனது நடனத்தின் மேல் அதிக ஈர்ப்புக்கொண்ட நடிகர் வினீத், மறைந்த நாட்டிய பேரொளி நடிகை பத்மினியின் உறவினராவார். கேரளாவில் பிறந்த இவர், சிறு வயதிலேயே பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் பல மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார். மேலும் கலைமாமணி விருது, கேரள அரசின் உயரிய விருது என பல விருதுகளை நடனம் ஆடியே அள்ளிக்குவித்துள்ளார்.

Also Read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

90 களில் எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், வினீத்தின் நடிப்பிற்கும், அழகிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. 1992 ஆம் ஆண்டு வெளியான ஆவாரம்பூ படத்தின் மூலமாக அறிமுகமான வினீத், தொடர்ந்து காதல் தேசம், மே மாதம், ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு அன்று இருந்த மார்க்கெட்டால் பல இயக்குனர்கள் இவரை அவர்களது படங்களில் கமிட் செய்வார்கள்.

ஆனால் வினீத் சரிவர ஷூட்டிங்கிற்கு வராமல் நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு அவ்வப்போது சென்று விடுவாராம். இதனால் கடுப்பான இயக்குனர்கள் வினீத்திற்கு காலப்போக்கில் பட வாய்ப்புகளை குறைக்க தொடங்கிவிட்டனர். இதனிடையே 2018 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் படத்தில் வில்லனாக நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் அவருக்கு அப்படம் கைகொடுக்காத நிலையில், தற்போது நடன இயக்குனராகவும், டப்பிங் கலைஞராகவும் உலா வருகிறார்.

Also Read: சந்திரமுகி படத்தில் இந்த காட்சியில் நடிக்க மறுத்த பிரபு.. அசால்டாக செய்து முடித்த நாசர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்