இரண்டு ரூபாய்க்காக கல்யாண வீட்டில் போய் டான்ஸ் ஆடினேன் என்று பிரபல நடிகர் நவாஸுதீன் கூறியுள்ளார்.

நடிகர் நவாஸுதீன் சித்திக் ஒரு பாலிவுட் நடிகர். இவர் இயக்குனர் சொல்லிக் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துக் கொடுப்பவர்.இவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் இரண்டு ரூபாய்க்காக திருமண வீடுகளில் நடனம் ஆடியதாக தன்னுடைய சிறு வயது அனுபவத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘சிறுவனாக நான் இருந்தபோது நான் என் நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். எங்கள் பகுதியில் நடக்கும் திருமணங்களுக்கு போய் நடனம் ஆடினால் இரண்டு அல்லது மூன்று ரூபாய் தருவார்கள். அது அப்போது எனக்கு பெரிய தொகை’’ என்றார்.
‘முன்னா மைக்கேல்’ படத்தின் இயக்குனர், தனக்கு நடனம் ஆட வராது என்று கூறியும் படத்தில் தன்னை நடனம் ஆட வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.