கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க அணையில் தேக்கி வைத்துள்ள நீர் அடிக்கிற வெயிலில் ஆவியாகாமல் தடுக்க, நம்ம மதுரை அமைச்சர் செல்லூர்ராஜீ ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்.

வெளிநாடுகளில் இது போன்ற திட்டங்கள் நவீன ஏற்பாடுகளுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை பார்த்து, தமிழகத்தில் வைகை அணையில் இந்த திட்டத்தை கொண்டு வர முயன்றார்.

அதிகம் படித்தவை:  தனது பிறந்த நாள் என்று கூட பார்க்காமல் கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்ட பிந்து மாதவி.!

அதாவது, பரந்து விரிந்துள்ள வைகை அணை நீரை தெர்மாகோல் வைத்து மூடுவதே இந்த திட்டம். முதல் கட்டமாக 200 சதுரஅடியில் 10 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்து, திட்டத்தை துவக்கிவைத்தார்.

தெர்மாகோல் சீட்களை கொண்டு அணைகளில் நீர் பரப்பில் மேல் பரிசல் மூலம் சென்று, ஊழியர்கள் சீட்டை பரப்பினர்.

அதிகம் படித்தவை:  'சார்லி' தமிழ் ரீமேக்கில் பார்வதியுடன் ஜோடியாகும் நடிகர் இவரா ?

சிறிது நேரத்தில், நீரில் பரப்பிய தெர்மாகோல் சீட்கள் காற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அந்த திட்டம் தோல்வி அடைந்தது.

வெளிநாடுகளில் நவீன வசதிகள் மூலம் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போ.. அந்த பத்துலட்ச ரூபாய் தண்டச்செலவா?