Connect with us

Cinemapettai

அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு’ இயக்குநர்?

Cinema News | சினிமா செய்திகள்

அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு’ இயக்குநர்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான `துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு’ முற்றிலும் மாறுபட்ட கதை என்பதால் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ரகுமானின் கதாபாத்திரமும் அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில், `துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அரவிந்த்சாமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top