சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இனிக்க இனிக்க பேசி கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. பச்ச துரோகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய டி இமான்

Sivakarthikeyan-D Imman: என்ன சிவகார்த்திகேயன் இப்படிப்பட்டவரா என இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே இது பற்றி அரசல் புரசலாக பேசப்பட்டாலும் சம்பந்தப்பட்டவரே இப்போது வெளிப்படையாக அந்த பச்ச துரோகத்தை ஆதங்கத்தோடு கூறி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அதாவது சிவகார்த்திகேயன், டி இமான் கூட்டணி என்றாலே வெற்றி கூட்டணி தான். அந்த அளவுக்கு பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும். ஆனால் சமீப காலமாக இவர்கள் இணைந்து பணியாற்றுவது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் இமான் எடுத்த அதிரடி முடிவுதான்.

ஆனால் அது எதனால் என்று புரியாமல் பலரும் அதிர்ந்த நிலையில் அவரே இப்போது ரகசியத்தை உடைத்து இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது. அதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணிபுரிவதற்கு வாய்ப்பே கிடையாது. ஒரு நல்ல குடும்ப நண்பராக இருந்த எனக்கு அவர் பச்ச துரோகம் செய்துவிட்டார்.

இனிக்க இனிக்க பேசி கழுத்தறுத்த அவருடன் எனக்கு எந்த உறவும் கிடையாது என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார். மேலும் அது எந்த மாதிரியான துரோகம் என்பதை வெளியில் கூற முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதை மூடி மறைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து சிவகார்த்திகேயன் மிகப்பெரும் துரோகத்தை செய்துவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

அது மட்டுமின்றி இதுவே இமான் விவாகரத்துக்கு காரணமாகவும் இருந்திருக்கிறது. இது பற்றி சிவகார்த்திகேயனிடம் அவர் கேட்ட போது அவர் சொன்ன பதிலையும் இமான் கூற மறுத்துவிட்டார். அது பண விஷயம் அல்லது உறவை தாண்டிய விஷயமாகவும் இருக்கலாம். மேலும் கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதுவரை எந்த வெளிப்படையான தகவல்களும் வெளிவரவில்லை.

தற்போது இமான் ஆதங்கத்தோடு வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வீடியோவை மிக வேகமாக ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிராக சில எதிர்ப்பலைகளும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News