டி.இமான் இசையமைப்பில் வெளிவரும் ‘டிக் டிக் டிக்’ படம் அவரது சினிமா வாழ்க்கையில் 100-வது படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டி. இமான் இசையமைப்பாளர் மற்றும் பாடகர். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார்.

imman


விசில் திரைப்படத்தின் அழகிய அசுரா பாடல் மூலம்பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனவர். திருவிளையாடல் ஆரம்பம், மைனா, ஜில்லா, கும்கி, ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் ஆன லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவை ஆகும்.


இந்திய சினிமாவிற்கே புதிய ஜானர் படம் தான் ‘டிக் டிக் டிக்’. விண்வெளி சம்பந்தப்பட்ட படம். இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ் திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீஸர், டிரையிலர் மற்றும் தீம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஆடியோவை வருகிற ஜனவரி 4–ஆம் தேதியும், படத்தை ஜனவரி 26-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


பலரும் தங்கள் வாழ்த்துக்களை இமான் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இமானும் தன் நன்றிகளை பகிர்ந்து வருகிறார்.