Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-imman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் மாற்ற சொன்ன அந்த மரண மாஸ் வரிகள்.. அது இருந்தால் தியேட்டர் ரணகளமாகும்.. டி.இமான்

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த திரைப்படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தார்.

மேலும் முதன்முறையாக தல அஜீத்துக்கு இமான் இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தல அஜித்தை பற்றி பெருமையாக பேச யாருக்குத்தான் பிடிக்காது. அதையேதான் இமானும் தனது இசையில் காட்ட வேண்டும் என ஒரு முக்கியமான பாடலின் முதல் வரியில் தல அஜித்தை பெருமைப் படுத்த முக்கிய லைனை எழுதி இருந்தாராம்.

தல அஜித்தின் ஓப்பனிங் பாடலாக வந்த அடாவடி தூக்குதுரை எனும் பாடலின் இரண்டாவது வரியில் அலப்பறையான எங்க தல என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதனைக் கேட்ட தல அஜித் தன்னை பெருமைப்படுத்தும் எந்த வரியையும் எழுத வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அதன்பிறகுதான் அந்த பாடல் அடாவடி தூக்குதுரை அலப்பறையான துரை என்று மாற்றப்பட்டுள்ளது. இதனை ஒரு பேட்டியில் இமான் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top