D Imaan

சிவாவுடன், அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் “விசுவாசம்”. இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என்பதை பட அறிவிப்பின் பொழுதே முடிவு செய்து அறிவித்தனர் தயாரிப்பு நிறுவனமான “சத்ய ஜோதி பிலிம்ஸ்”. இன்றளவும் ப்ரீ- ப்ரோடுக்ஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகின்றது.

Visuvasam

எடிட்டராக ரூபென், ஒளிப்பதிவாளராக வெற்றி, ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தல ரசிகர்கள் குஷி ஆகினார்.

ஆரம்பம் முதல் இசை அமைப்பாளர் யார் என்ற குழப்பம் இருந்த வண்ணமே இருந்தது. ஆரம்பத்தில் யுவன் என்றனர், பின்னர் அனிருத் என்ற பேச்சு, இறுதியில் டி. இமான் என்று செய்தார்கள் வந்தது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது தான் சூழல்.

Team Visuvasam

இன்று மாலை 5 மணியளவில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இமான் தான் இசை என்பதை உறுதி செய்தனர்.

அதன் பின் இமான் தன் ட்விட்டர் பக்கத்தில் ” இத்தனை வருடங்களாகவே , என்னிடம் பொதுவாக ஒரு கேள்வி கேட்ப்பார்கள் ! தல படத்திற்கு எப்பொழுது இசை அமைக்கப்போறீர்கள் ? என்னிடம் இப்பொழுது பதில் உள்ளது. ஆம் நபர்களே. உறுதியாகிவிட்டது நான் தான் விசுவாசம் படத்திற்கு இசை! உங்கள் ஆசிர்வாதங்களுடன் சிறப்பாக இசை அமைப்பேன். சிவா சார் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ்க்கு நன்றிகள். கடவுளை போற்றுவோம்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

பலரும் இமானுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் தல ரசிகர்கள் தீம் பாடல் சிறப்பாக இருக்க வேண்டும். மெலடி காதல் பாடல் உங்கள் ஸ்டைலில் போடுங்க என்று தங்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.